×

தற்கொலை அளவுக்குப் போய்விட்டேன்... நமீதா பகிரும் 
பாசிட்டிவ் ஸ்டோரி
 

தீவிர மன அழுத்தத்தால் தற்கொலை அளவுக்குப் போய் பின்னர் அதிலிருந்து மீண்டு வந்ததாக நடிகை நமீதா பாசிட்டிவ் ஸ்டோரி பகிர்ந்திருக்கிறார். 
 
 

தீவிர மன அழுத்தத்தால் தற்கொலை அளவுக்குப் போய் பின்னர் அதிலிருந்து மீண்டு வந்ததாக நடிகை நமீதா பாசிட்டிவ் ஸ்டோரி பகிர்ந்திருக்கிறார். 


பிரபல நடிகை நமீதாவுக்கு சமீபகாலமாக பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை. இதனால், டிவியில் ரியாலிட்டி ஷோ ஜட்ஜாக சில காலம் பணியாற்றி வந்தார். உடல் எடை கூடியதால் அவதிப்பட்டு வந்த நமீதா, தொடர் உடற்பயிற்சி, தியானம் போன்றவை மூலம் அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். தனது பயணம் குறித்து நெகிழ்ச்சியான பதிவை ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார் நமீதா. 

அதில், ``இடதுபுறம் இருக்கும் போட்டோ 9 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது. வலதுபுறம் இருக்கும் போட்டோ சில நிமிடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டது. எந்த பில்டரும் மேக்கப்பும் இல்லாமல் எடுத்தது. 

இந்த பதிவை நான் பகிர்வதற்கு முக்கிய காரணம் விழிப்புணர்வு மட்டுமே. இடதுபுறம் இருக்கும் படத்தில் நான் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன். அதில் கொடுமை என்னவென்றால், எனக்கு ஏற்பட்டிருந்த பிரச்சனை பற்றி எனக்கு எதுவும் தெரியாததே. சமூகத்தில் மற்றவர்களுடன் பழகுவதைத் தவிர்த்து வந்தேன். இரவு நேரங்களில் தூங்க முடியாது. அதேபோல், உணவுக்கு அடிமையானேன். ஒரு கட்டத்தில் தினசரி பீட்சா ஆர்டர் பண்ணி சாப்பிடுவது 
வழக்கமானது. திடீரென உடல் எடை கூடியது. 

ஏதோ ஒரு பிரச்சனை என்பதை மட்டுமே என்னால் உணர முடிந்தது. எனது உடல் எடை அதிகபட்சமாக 97 கிலோ வரை கூடியது. நான் மதுவுக்கு அடிமையானதாக சிலர் கிசுகிசுக்கத் தொடங்கினார்கள். ஆனால், உண்மையில் எனக்கு PCOD மற்றும் தைராய்டு பிரச்சனை இருந்தது. தற்கொலை 
செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மேலோங்கி இருந்தது. எதுவுமே, யாருமே எனக்கு மன அமைதியைத் தரவில்லை. 


அப்போதுதான் கடவுள் கிருஷ்ணரைக் கண்டடைந்தேன். ஐந்து நீண்ட ஆண்டுகள் மன அழுத்தத்தில் சிக்கித் தவித்த நிலையில், அதிலிருந்து மீண்டு வந்தேன். கிருஷ்ணர் துணையுடன் மகா மந்திர தியானம் கைகொடுத்தது. எந்த டாக்டரையோ, தெரபிக்கோ நான் சென்றதில்லை. இறுதியாக மன அமைதி பெற்றேன். இந்த போஸ்டைப் பகிர்வதற்கான நோக்கம், உங்களுக்கான அமைதியை வெளியில் தேடாதீர்கள். அது உங்களுக்குள் இருக்கிறது’’ என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News