×

கொரோனா வந்தாலும் போஸுக்கு குறைச்சல் இல்ல! - அடங்கமாட்டியா குமுதா?...

 
கொரோனா வந்தாலும் போஸுக்கு குறைச்சல் இல்ல! - அடங்கமாட்டியா குமுதா?...

பா. ரஞ்சித் இயக்கிய ‘அட்டகத்தி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. அதன்பின் எதிர் நீச்சல், புலி, கபடதாறி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஒருபக்கம், போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

சமீபத்தில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.  ‘எனக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் வீட்டிலேயே தன்னை தனிமை படுத்திக்கொண்டேன். நீங்களும் பாதுகாப்பாக இருங்கள்.’ என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

ஆனாலும், வழக்கம் போல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அவர் பகிர தவரவில்லை. எனவே, கொரோனா வந்தாலும் போஸுக்கு குறைச்சல் இல்ல, அடங்கமாட்டிய குமுதா?.. என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News