Categories: Cinema News latest news throwback stories

சான்ஸ் கிடைச்சா ஹீரோயினுக்கு முத்தம் கொடுத்துவார்.. கமலுக்கு பயந்து கடைசி வரை நடிக்காத நடிகை!..

தமிழ் சினிமாவில் சின்ன வயதிலேயே நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது வரை ஒரு பெரும் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். சிறுவயதிலும் சரி அவருடைய இளைய வயதிலும் சரி தமிழ் சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு நடிகராகவே கமல்ஹாசன் இருந்து வந்துள்ளார்.

கமல்ஹாசன் இளமையாக இருந்தபோது அவருக்கு இளைய தலைமுறை மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது. ஒருமுறை ரஜினிகாந்த் பேட்டியில் கூறும்போது நான் சினிமாவிற்கு வரும்போதே கமல்ஹாசன் சூப்பர் ஸ்டாராகதான் இருந்தார். இளைய தலைமுறை மத்தியில் பிரபலமாக இருந்தார் என கூறியிருந்தார்.

கமல்ஹாசன் நடிகைகளுடன் நெருங்கி பழகுவதே இதற்கு முக்கிய காரணமாக இருந்தது எனக்கு கூறப்படுகிறது. கமல்ஹாசன் அவர் படத்தில் நடிக்கும் நடிகைகளுடன் மிகவும் நெருங்கி பழகுவதை பல படங்களில் பார்க்க முடியும். சில படங்களில் நடிகைகளுக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் காட்சிகளையும் கமல் படங்களில் அப்போது பார்க்க முடியும்.

கமல்ஹாசன் மீது ஏற்பட்ட பயம்:

இதனால் அப்போது பல நடிகைகள் சொல்லாமல் கொள்ளாமல் கமல்ஹாசன் முத்தம் கொடுத்து விடுவார் என பேட்டிகளில் கூறியுள்ளனர். புன்னகை மன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு நடிகை ரேகா ஒரு பேட்டியில் கூறும்போது கமல்ஹாசன் முத்த காட்சி இருக்கு என்று முன்னாடியே கூறவில்லை அப்போது திடீரென முத்தம் கொடுத்து விட்டார் என கூறியிருந்தார்.

அதே காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான கதாநாயகியாக வளர்ந்து வந்தார் நடிகை நதியா நடிகை நதியா. அப்போது பிரபலமாக இருந்த பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். ராஜாதி ராஜா திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு கூட ஜோடியாக நடித்துள்ளார்.

ஆனால் கவர்ச்சி எதுவும் இல்லாத டீசண்டான கதாபாத்திரமாக தான் நதியா நடிப்பார். எனவே அவர் கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் கூட நடித்தது கிடையாது அதற்கு கமல்ஹாசன் குறித்த இந்த சர்ச்சை அவருக்கு ஏற்படுத்திய பயமே காரணம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விமானத்தில் இருந்து போஸ்டர்களை தூக்கி எறிந்த எம்.ஜி.ஆர் பட தயாரிப்பாளர்… இப்படி ஒரு புரொமோஷனா?

Rajkumar
Published by
Rajkumar