×

அண்ணாத்த படப்பிடிப்பிற்காக தனி விமானத்தில் நயன்தாரா - வைரல் புகைப்படங்கள்

 
அண்ணாத்த படப்பிடிப்பிற்காக தனி விமானத்தில் நயன்தாரா - வைரல் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. சில ஹீரோக்களை விட அதிக சம்பளம் வாங்குபவர். இவர் நடித்தாலே படம் ஹிட் என்கிற ரேஞ்சுக்கு உயர்ந்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. இவர் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானாலே அது வைரல்தான். விக்னேஷ் சிவனுடன் இவர் ஊர் சுற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாவது உண்டு.

nayan

ஒருபக்கம், 3 மாதங்களாக தடைபட்டிருந்த ‘அண்ணாத்தே’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இப்படம் பற்றிய எந்த தகவலும் வெளியே வராமல் படக்குழு பாதுகாத்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை நயன்தாரா  தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார். அவர் விமானத்தில் இருந்து இறங்கி செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News