ஒரு புதிய தொடக்கம்… விஜய்க்கு நயன்தாரா வாழ்த்து
நடந்து முடிந்த சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின். அதில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. தனது முதல் தேர்தலிலேயே பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றுள்ளார். அவரது கட்சியின் இந்த அசுர வளர்ச்சி திராவிடக் கட்சிகளுக்குப் பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. தவெகவின் இந்த மகத்தான வெற்றியை அடுத்து திரையுலகினர் பலரும் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை நயன்தாராவின் வாழ்த்துப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் ,
வாழ்த்துக்கள் விஜய் சார். இன்று வரலாறு படைத்திருக்கிறீர்கள். இது தான் ஒரு புதிய தொடக்கம்! என்று பதிவிட்டுள்ளார்.
நயன்தாரா மட்டுமல்லாது, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு, பூஜா ஹக்டே, கீர்த்தி சுரேஷ் என ஒட்டுமொத்த திரையுலகமே விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
