Neena: கட்டாய கல்யாணம்.. அதுவும் இவ்ளோ சின்ன வயசுல? காணாமல் போல நீனா
குழந்தை நட்சத்திரம் நீனா:
கேளடி கண்மணி, விடுகதை, போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை நீனா. அதுவும் கேளடி கண்மணி படத்தில் ப்ளாஷ்பேக் போர்ஷனில் எஸ்.பி.பிக்கு மகளாக நடித்திருப்பார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். பேபி ஷாலினி, பேபி ஷாமிலி வருவதற்கு முன் நீனாதான் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
அஞ்சலி படத்தில் கூட நீனா நடித்திருந்தார். அஞ்சலி படத்தில் ஷாமிலியா நீனாவா என்ற போட்டி இருந்ததாம். தேசிய விருது கடைசியில் ஷாமிலிக்கு கிடைத்தது. இப்படி தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த நீனா விடுகதை படத்தில் லீடு ரோலில் நடித்தார். அதுவும் பிரகாஷ்ராஜுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அந்தப் படம் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது.
சீரியலில் நம்பர் ஒன் நடிகை:
சினிமாவில் இருந்த வரைக்கும் முக்கியமான கேரக்டரிலேயேதான் நீனா நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் சினிமா போதும் என மன நிலைக்கு வந்ததும் சின்னத்திரை கதவு அவரை நோக்கி திறந்தது. குறிப்பாக சித்தி சீரியல் நீனாவின் புகழை மேலும் உயர்த்தியது. அதனை தொடர்ந்து அண்ணாமலை சீரியலிலும் நடித்து வந்தார். இப்படி அவர் இருந்த காலகட்டம் வரை நீனாதான் டாப் நடிகையாக இருந்திருக்கிறார்.

அந்த நேரத்தில் நீனாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவரது அப்பா முடிவெடுக்க, அது நீனாவுக்கு பிடிக்கவில்லையாம். ஏனெனில் அந்த நேரத்தில் மிகவும் பீக்கில் இருந்திருக்கிறார். கையில் ஏகப்பட்ட ப்ராஜக்ட்டுகள். அப்போது அவருக்கு வயது 21 இருக்குமாம். அந்தந்த நேரத்தில் நடக்க வேண்டியது நடக்கணும் அப்படிங்கிறதுல நீனாவின் அப்பா மிகவும் கண்டிப்பாக இருந்திருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு:
அதனால் திருமணம் செய்யும் போது நீனா அழுது கொண்டேதான் இருந்தாராம். வாங்கிய அட்வான்ஸ்களை எல்லாம் அவரது அப்பா திருப்பி கொடுத்துவிட்டாராம். ஆனால் என்னுடைய அப்பா எடுத்த முடிவு சரிதான், நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என நீனா கூறியுள்ளார். அவருக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 22 வருடங்கள் ஆகிவிட்டது. ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் நீனா.
20 வயதில் ஒரு மகளும் 16 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். தற்போது நீனா டீச்சராக வேலை பார்த்து வருகிறார். அவரது கணவரும் ஒரு கம்பெனியில் நல்ல போஸ்டிங்கில் இருந்து வருகின்றனர். அப்பா வீட்டில் இருந்ததை விட இங்கு சந்தோஷமாக இருக்கிறாராம் நீனா. ஆனால் இப்பொழுது நீனாவை அவரது கணவர் மீண்டும் நடிக்க போ என்று சொல்லி வருகிறாராம். ஆனால் நீனாவுக்கு குடும்பம், வேலை இதுவே போதும் என்றாகி விட்டது என ஒரு பேட்டியில் மனம் திறந்திருக்கிறார் நீனா.
