5 லட்சம் செலவு.. ஒரு லட்சத்துக்கு மேக்கப்… நடிகை நிதி அகர்வால் ஓபன் டாக்!
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிக்களில் நடித்து வருபவர் நிதி அகர்வால். தமிழில் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் மூலம் அறிமுகம் ஆனார். அடுத்து ஜெயம் ரவி ஜோடியாக பூமி மற்றும் உதய நிதியுடன் கலகத்தலைவர் உள்ளிட்ட சில படத்தில் நடித்தில் நடித்தார். ஆனாலும் தமிழில் அவருக்கான சரியான வெற்றி கிடைக்கவில்லை. இதனையடுத்து தற்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் நிதி அகர்வால் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், ஒரு நடிகையாக இருப்பதில் பல சவால்கள் உள்ளன. எனது மாதாந்திரப் பயணங்கள், தங்குமிடம், உணவு , உடற்பயிற்சி, தனிப்பட்ட பயிற்சியாளர் மற்றும் அழகு பராமரிப்பு என அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே மாதம் ரூ. 5 லட்சம் வரை செலவாகிறது.
ஒரு நடிகை ஜிம் மற்றும் டயட் விஷயத்தில் சமரசம் செய்ய முடியாது என்று அவர் கூறினார். அதுமட்டுமின்றி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்றால், அதற்கான மேக்கப், ஆடை அலங்காரம், ஹேர் ஸ்டைலிங் மற்றும் அந்தப் புகைப்படங்களை எடுக்க ஒரு புரொபஷனல் போட்டோகிராபர் என எல்லாவற்றையும் சேர்த்தால் சுமார் ரூ. 1 லட்சம் வரை செலவாகும். எனத் தெரிவித்துள்ளார். சில நேரங்களில் இந்தச் செலவுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள். பல நேரங்களில் நடிகைகளே தங்கள் சொந்தப் பணத்திலிருந்து இந்த ஒரு லட்ச ரூபாயைச் செலவு செய்ய வேண்டியிருக்கும் எனு கூறினார்.
