Categories: latest news throwback stories

நடிகை அடித்த அடி!..வலியால் துடித்த சிவாஜி!..அடுத்து என்ன நடந்தது தெரியுமா?..

தமிழ் சினிமாவில் நாட்டியப் பேரோளியாக திகழ்ந்தவர் நடிகைபத்மினி. திருவாங்கூர் சகோதரிகள் என போற்றப்படும் இவருடன் கூடப்பிறந்தவர்கள் இருவர். அதில் பத்மினியும் அவரது சகோதரியான ராகினியும் படத்தில் நடித்திருக்கின்றனர்.

மேலும் இவர்களுக்கு நடிப்பதை விட நாட்டியம் தான் பெரும் விருப்பமாகவே இருந்திருக்கிறது. ஒரு நேரத்தில் பத்மினியை தேடி படவாய்ப்புகள் வர ஏழை படும் பாடு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பத்மினி. நடித்த முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார்.

இதையும் படிங்க : அடுத்தடுத்து ரெண்டு கல்யாணம்…அசால்ட்டா சமாளித்த சிவாஜி…இது தெரியாம போச்சே!..

அப்போது சிவாஜி பராசக்தி படத்தில் நடித்து ஓரளவு புகழை பெற்ற சமயத்தில் இரண்டாவது படமான பணம் என்ற படத்தில் பத்மினியுடன் ஜோடி சேர்ந்தார். அதிலிருந்து இருவரும் கிட்டத்தட்ட 39 படங்கள் சேர்ந்து நடித்தனர். சினிமா துறையில் மிகவும் பிரபலமான ஜோடி என்றே பேரையும் வாங்கியிருந்தனர்.

இந்த நிலையில் ஒரு படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் சிவாஜியை கன்னத்தில் அறையும் விதமான காட்சியாம் பத்மினிக்கு. ஆனால் பத்மினி சிவாஜியை நான் எப்படி அடிப்பது என்று தயங்க சிவாஜி ‘பப்பிம்மா, நீ அடிப்பது சிவாஜியை அல்ல, அந்த படத்தில் இருக்கும் கதாபாத்திரத்தை’ என கூற சம்மதித்தாராம் பத்மினி. ஆக்‌ஷன் என இயக்குனர் சொன்னதும் படார் படார் என்று கன்னத்தில் அறைவிட கட் என சொல்லியும் அது கேட்காததால் தொடர்ந்து அறை கொடுத்துக் கொண்டே இருந்தாராம். உடனே சிவாஜி ‘பப்பிம்மா இயக்குனர் கட் சொல்லிவிட்டார் ’ என்று கூற பத்மினி நிறுத்தியிருக்கிறார். அவ்ளோதான் அதிலிருந்து இரண்டு நாள்கள் சிவாஜி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லையாம். ஏனெனில் பத்மினி அறைந்த அறையில் சிவாஜியின் கன்னம் வீக்கத்தில் இருந்ததாம்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini