Connect with us
Sivaji Padmini

Cinema News

சிவாஜி கட்டிய தாலியை ரொம்ப நாளா மறைத்து வைத்திருந்த பத்மினி…. அப்புறம் நடந்தது தான் ஹைலைட்..!

தமிழ்ப்பட உலகில் ரசிகர்கள் பத்மினியை நாட்டியப் பேரொளி என வர்ணித்தார்கள். அதற்கு அவர் 100 சதவீதம் பொருத்தமானவர். கேரளாவில் ஒரு சிற்றூரில் பிறந்தவர் இவர். இவருக்கு லலிதா, ராகினி என இரு சகோதரிகளும் உண்டு. சிறு வயதிலேயே இவர்கள் மயில் போல துள்ளிக்குதித்து நடனமாடி அங்குள்ளவர்களை மகிழ்விப்பார்களாம்.

ஆனால் இந்த மூன்று பேர்களிலும் முத்தாய்ப்பாக ஜொலித்தவர் நடிகை பத்மினி தான். இவர் நாட்டியத்தில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் மிளிர்ந்தார்.

இவர் முதன் முதலாக இந்திப்படத்தில் தான் காலடி எடுத்து வைத்தார். அந்தப் படத்தின் பெயர் கல்பனா. அதன்பின் 1949ல் இவர் தமிழ்த்திரை உலகில் ஜொலிக்க ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வாழ்க்கை, பவளக்கொடி, சந்திரலேகா என பல சூப்பர்ஹிட் படங்கள் வந்தது. பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பினார்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து அசத்தினார். ரசிகர்களின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் அவர் எந்தப் படத்தில் நடித்தாலும் படம் சூப்பர்ஹிட் தான் என்றாகி விட்டது.

இதையும் படிங்க… கலைஞர் 100வது விழாவுக்கு ‘நோ’ சொன்ன விஷால்!.. பின்னணியில் இருப்பது அந்த நடிகராம்!…

அவர் ஜெமினியுடன் நடித்த பல படஙகளுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. எம்.ஆர்.ராதாவுடன் அவர் நடித்த சித்தி படம் மாபெரும் வெற்றியைக் கொடுத்தது. அந்த சமயத்தில் அவரது நடிப்பைப் பத்திரிகைகள் எல்லாம் போட்டிப் போட்டுக் கொண்டு புகழ்ந்து தள்ளின.

எம்ஜிஆருடன் மன்னாதி மன்னன், மதுரை வீரன் என பல வெற்றிப்படங்களில் நடித்து அசத்தினார். சிவாஜியுடன் ராஜா ராணி, தங்கப்பதுமை, தெய்வப்பிறவி, தில்லானா மோகனாம்பாள், பேசும் தெய்வம், வியட்நாம் வீடு, இருமலர்கள் என 50க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களில் நடித்து விட்டாராம். எந்தக் கேரக்டரைக் கொடுத்தாலும் அதில் திறம்பட நடித்து அசத்தி விடும் ஆற்றல் படைத்தவர் பத்மினி.

அந்த வகையில் அவருக்கும் சிவாஜிக்கும் தான் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அந்தக் காலத்தில் அழகான ஜோடிப் பொருத்தம் என்றால் சிவாஜி, பத்மினியைத் தான் ஒப்பிட்டு சொல்வார்களாம்.

TM

TM

இந்த ஜோடி குறித்த ஒரு சுவையான தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து ஒரு யூடியூப் சேனல் ஒன்றில் குட்டி பத்மினி தெரிவித்துள்ளார். ஒரு நாள் சிவாஜி சூட்டிங் முடிந்து கமலாவை திருமணம் செய்ய அவசரம் அவசரமாக புறப்பட்டாராம். அதே நேரத்தில் படப்பிடிப்பு ஒன்றில் பத்மினிக்கு தாலி கட்டும் காட்சியும் எடுக்கப்பட்டதாம். இங்கே தாலி கட்டிய பிறகு அவர் நிஜத்தில் தாலி கட்ட சுவாமி மலைக்குச் சென்றாராம்.

ஆனால் பத்மினியோ சிவாஜி கட்டிய தாலியை கழட்டவே இல்லையாம். அந்த தாலி மேல் அவருக்கு அவ்வளவு மரியாதை. பல மாதங்களாக ஜாக்கெட்டுக்குள் போட்டு மறைத்து வைத்துக் கொண்டாராம். இதை எப்படியோ ராகினி பார்த்து விட, அம்மாவிடம் சொல்லிக் கொடுத்து விட்டாராம். அவங்களும் அந்தத் தாலியைக் கழுத்தில் இருந்து எடுத்து விட்டார்களாம். ஆனால் அம்மா தாலியைத் தான் எடுத்தாரே தவிர, பத்மினியின் மனதில் இருந்து சிவாஜியை எடுக்கவில்லையாம். இப்படி ஒரு தெய்வீகக் காதலை மனதுக்குள் வைத்து இருந்துள்ளார் அந்த நாட்டியப் பேரொளி.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top