பாக்கியராஜ் இயக்கி நடித்த வீட்ல விசேஷங்க படம் மூலம் அறிமுகமானவர் பிரகதி. அதன்பின் பெரிய மருது, சும்மா இருங்க மச்சான், புதல்வன், ஜெயம், சிலம்பாட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், கதாநாயகி வாய்ப்புகள் வரவில்லை.
எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்று அம்மா வேடத்தில் நடிக்க துவங்கி க்ளிக் ஆனார். தெலுங்கில் பல திரைப்படங்களில் அம்மா வேடம். அதன்பின் தமிழிலும் சில படங்களில் அம்மா வேடங்களில் நடித்தார்.
இனிமே இப்படித்தான் படத்தில் சந்தானத்திற்கு அம்மாவாகவும், வணக்கம்டா மாப்பிள்ளை படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு அம்மாவாகவும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். தற்போது பிரபுதேவா நடித்துள்ள பகீரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சினிமாவில் சேலை கட்டி இழுத்தி போர்த்தி நடிக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வதெல்லாம் கவர்ச்சி புகைப்படங்கள்தான். மேலும், நடனமாடியும், உடற்பயிற்சி செய்தும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். 44 வயதாகி விட்டாலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில், கவர்ச்சி நடிகை போல் உடை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களை அதிர வைத்துள்ளது. இதற்கு சில பேர் லைக் போட்டாலும், வயசான காலத்துல உனக்கு இது தேவையா? என்கிற கமெண்ட்டுகளும் வராமல் இல்லை.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…