ஒருவழியாக திருமணம் செய்ய ரெடியான பிரியா பவானி சங்கர்!.. காதலர் ஹேப்பி!..

 
priya

செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, சின்னத்திரை மூலம் கதாநாயகியாக வளர்ந்த நடிகை பிரியா பவானி சங்கரின் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

priya

பிரியா பவானி சங்கர் தனது நண்பரும் நீண்ட நாள் காதலருமான ராஜவேல் ராஜை 10 ஆண்டுகளாகக் காதலித்து வருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு இருவரும் இணைந்து தங்களது கனவு இல்லத்தையும் வாங்கினர். மேலும், ஒரு பேட்டியில் 2025ஆம் ஆண்டு திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும் பிரியா தெரிவித்திருந்தார்.

priya

இந்த நிலையில், தற்போது பிரியா தனது காதலர் ராஜவேலுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.  இதனால் இருவருக்கும்  விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. 

priya

மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ப்ரியா பவானிசங்கர், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், திருச்சிற்றம்பலம், யானை, பத்து தல, இந்தியன் 2, டிமான்டி காலனி 2, பிளாக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

priya

இந்த ஆண்டு ரவி தேஜாவுடன் இணைந்து நடித்த இருமுடி திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதை தொடந்து டிமான்டி காலனி 3, மரகத நாணயம் 2 உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web