என்னை கல்யாணம் பண்ணிக்குங்க!.. அடாவடி ரசிகருக்கு பிரியாமணி கொடுத்த பதிலடி.....
Wed, 31 Mar 2021

பருத்தி வீரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் பிரியா மணி. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார். 2017ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர் ஒருவர் ‘என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?’ என கேட்டிருந்தார். இதற்கு கூலாக பதில் கூறிய பிரியாமணி ‘எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. என் கணவரிடம் கேளுங்கள். அவர் சம்மதம் தெரிவித்தால் நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்’ என பதிலளித்துள்ளார்.