Categories: Cinema News latest news throwback stories

கண்டிப்பா பெரிய நடிகன் ஆவ பாரு? – ராதிகா கணித்த அந்த நடிகர் யார் தெரியுமா?..

அழகு என்பது நிறத்தில் கிடையாது என்பதை தமிழ் சினிமாவில் நிரூபித்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ராதிகா. கருப்பான முகத்தை கொண்டிருந்தாலும் கூட அதையும் வைத்து தமிழில் வெற்றி படங்களை கொடுத்து முன்னேறிய நடிகையாக ராதிகா இருக்கிறார் இதனால் அப்பொழுது கருப்பாக இருந்த பலருக்கும் ஒரு முன்மாதிரியாக ராதிகா இருந்தார்.

radhika

பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ராதிகா. ராதாரவி தங்கையான ராதிகா பாரதிராஜா மூலமாக அறிமுகமானதால் முதல் படமே அவருக்கு நல்ல படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தார். கமல் ரஜினி போன்ற பெரும் நடிகர்களுக்கெல்லாம் ஜோடியாக நடித்தார். பாக்யராஜ் இயக்கத்தில் வழிவந்த தாவணி கனவுகள் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்த திரைப்படத்தில் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தார் நடிகர் பார்த்திபன்.

அப்போதே கணித்த ராதிகா:

அந்தப் படத்திலேயே ஒரு தபால்காரர்கள் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்திருப்பார். அப்பொழுது ஒரு சமயம் அவர் நடித்துக் கொண்டிருந்ததை பார்த்த ராதிகா அவரை அழைத்து எப்படியும் சில நாட்களில் நீங்களும் பெரிய கதாநாயகன் ஆவீர்கள் பாருங்கள் என்று சாதாரணமாக கூறிவிட்டு சென்றார்.

அதன் பிறகு அதே போலவே பார்த்திபன் சில காலங்களிலேயே ஒரு கதாநாயகன் ஆனார். இப்பொழுது வரையும் பார்த்திபன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதுக்குறித்து பார்த்திபன் ஒரு பேட்டியில் கூறும் பொழுது நான் கதாநாயகன் ஆவேன் என்பதை அப்பொழுதே கணித்தவர் நடிகை ராதிகா என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தயவு செஞ்சி ஹீரோவா நடிடா!.. தனுஷிடம் கெஞ்சிய கஸ்தூரி ராஜா

Published by
Rajkumar