Connect with us
radhika

latest news

எம்.ஆர்.ராதா வீடியோ போட்டு நக்கலடித்த ராதிகா!.. தளபதி தாக்கப்பட்டாரா?!…

Radhika: நடிகவேள் எம்.ஆர்.ராதா தமிழ் சினிமாவில் பகுத்தறிவு கருத்துக்களை பேசி வந்தவர். 60களிலேயே சமுதாயத்திற்கு தேவையான பல விஷயங்களை தைரியமாக சினிமாவில் பேசினார். எனவே, இவருக்கு பலத்த எதிர்ப்பும் உருவானது. ஆனால், அதையெலாம் அவர் கண்டுகொண்டதே இல்லை. கடைசிவரை தனது முற்போக்கு மற்றும் பகுத்தறிவு கருத்துக்களை தொடர்ந்து திரையில் பேசி வந்தார். சினிமாவில் மட்டுமில்லை. சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடகங்களை போட்ட போதும் அவர் இதைத்தான் செய்தார்.

குறிப்பாக கடவுள் நம்பிக்கை, அது தொடர்பாக மக்களிடம் இருக்கும் மூட நம்பிக்கை என எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நக்கலடித்தவர் இவர். அதனால், இவரின் நாடகங்களுக்கும் பல வகைகளிலும் எதிர்ப்பு இருந்தது. அதையெல்லாம் சமாளித்து நாடகங்களை போட்டவர் எம்.ஆர்.ராதா. இரத்தக்கண்ணீர் படத்தில் இவர் பேசிய வசனங்களெல்லாம் இப்போதும் வீடியோவாக சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவரின் மகள் ராதிகா பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதேபோல், ராதாரவின் மகன் ராதாரவியும் சினிமாவில் முக்கிய நடிகராக இருக்கிறார்.

இவரும் அப்பாவை போலவே மனதில் பட்டதை அப்படியே பேசுவார். இதனால் சில சமயம் அவர் சர்ச்சையிலும் சிக்குவதுண்டு. ராதிகா அப்படி பேசமாட்டார் என்றாலும் சில சமயம் டிவிட்டரில் அவ்வப்போது எதாவது பதிவு போட்டு மறைமுகமாக யாரையாவது நக்கலடிப்பர். இந்நிலையில், தற்போது ஒரு படத்தில் ஒரு மறைந்த நடிகையின் எலும்புக்கூடை பார்த்து அவரின் அப்பா எம்.ஆர்.ராதா பேசும் வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

ஒரு காலத்தில் நீ இருந்த நிலை என்ன?.. உனக்காக எத்தனை பேர் காத்திருந்தனர்?.. நீ என்ன பேசுவாய் என ஊடகங்களும்,பத்திரிக்கைகளும் காத்திருந்தன?.. ஆனால், இப்போது உன் நிலை என்ன?’ என்றெல்லாம் எம்.ஆர்.ராதா பேசியிருக்கிறார். தற்போது கரூர் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜயை பலரும் விமர்சித்து வரும் நிலையில் ராதிகா விஜயை நக்கலடித்தே இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார் என திமுகவினர் பேசி வருகிறார்கள்.

Continue Reading

More in latest news

To Top