சர்ச்சைதான் வேணும்... நடிகையின் புதிய முடிவு
வாய்ப்புகள் குறைந்ததால் சர்ச்சைக்குரிய படங்களில் நடித்து மீண்டும் மார்க்கெட்டைப் பிடித்துவிடலாம் என்று கணக்குப் போடுகிறாராம் அந்த நடிகை.
Mon, 29 Mar 2021

ஆந்திர இறக்குமதியான அந்த நடிகை தமிழில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஹிட் கொடுத்து முன்னணி நடிகைகள் பட்டியலில் தன் பெயர் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். என்ன நடந்ததோ தெரியவில்லை, இடையில் நடிகையை ஆளையே காணோம்.
விசாரித்ததில் குடும்பப் பஞ்சாயத்தால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தாராம். இப்போது மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கும் நடிகை இதற்காக அதிரடி முடிவை எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.
பட வாய்ப்புகள் குறைவதால், சர்ச்சையான படங்களாகத் தேடிப்போய் நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம். இப்போது 40 வயதுப் பெண்ணாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறாராம். அந்தப் படத்தில் 20 வயது பையனுடன் ரொமான்ஸ் பண்ணும் காட்சிகள் இருக்கின்றனவாம். மார்க்கெட்டைப் பிடித்தே தீருவது என சபதமெடுத்திருக்கிறாராம் அந்த நடிகை.