×

என்ன இருந்தாலும் இவ்வளவு ஆகாதும்மா... நடிகையின் துணிச்சல்

டீச்சர் கேரக்டரால் புகழ்பெற்ற அந்த நடிகையின் துணிச்சலான முடிவுதான் இப்போ ஹாட் டாபிக். 
 
என்ன இருந்தாலும் இவ்வளவு ஆகாதும்மா... நடிகையின் துணிச்சல்

மலையாளத்தில் அறிமுகமாகியிருந்தாலும் தமிழில்தான் அவருக்கு மிகப்பெரிய ஃபேன் பேஸ் இருக்கிறது. இதற்காக இரண்டொரு தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் தேசிய விருது நாயகனுடன் அவர் போட்ட குத்தாட்டம் மட்டும்தான் தமிழில் அடையாளம் என்றாகிவிட்டது. தமிழ் சினிமா கண்டுக்கலனா என்ன நான் பக்கத்து ஸ்டேட்டுக்குப் போறேன் என டோலிவுட்டில் பிஸியாகிவிட்டார். 

இங்கு பல முக்கியமான பாத்திரங்களில் அவரை நடிக்க வைக்க இயக்குனர்கள் நினைத்தாலும் நம்ம நடிகையைப் பார்த்து கதை சொல்லவே டைம் கொடுக்க மாட்டேன்கிறாராம். கேட்டா நான் ரொம்ப பிஸி என அலட்டிக் கொள்கிறாராம். இந்த சர்ச்சை முடிவதற்குள் வேறொரு சர்ச்சையில் நம்ம நடிகை சிக்கியிருக்கிறார். 

முன்னணி நடிகரோடு ஜோடி போட அவருக்கு வாண்டடாக வந்த வாய்ப்பையே உதறித் தள்ளியிருக்கிறாராம். `எந்த டாப் ஹீரோவா இருந்தாலும் என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால்தான் நடிப்பேன்’ என்று அசால்ட் ஸ்டேட்மெண்ட் தட்டவே, வாயடைத்துப் போயிருக்கிறது திரையுலகம். அட அம்மாடி அம்மா என்று வேறொரு நடிகையை புக் செய்து ஷூட்டிங்கைத் தொடங்க இருக்கிறார்களாம். என்ன இருந்தாலும் இவ்வளவு ஆணவம் ஆகாதும்மா என சக நடிகைகள் சொல்லிய அட்வைஸ் காற்றில்தான் பறக்கிறதாம். 

From around the web

Trending Videos

Tamilnadu News