×

வாய்ப்பில்லாமத்தான் இருக்கேன்... அதுக்காக?.. சீறிய நடிகை

தான் வாய்ப்பில்லாமல் இருக்கிறேன் என்பதற்காக காமெடி நடிகருடன் எல்லாம் ஜோடி சேர்ந்து நடிக்க முடியுமா என சீறியிருக்கிறார் கோடம்பாக்கத்துக்கு நடிகை ஒருவர். 
 
வாய்ப்பில்லாமத்தான் இருக்கேன்... அதுக்காக?.. சீறிய நடிகை

ஒற்றை ரூபாய் நாணயம் மூலம் மிகவும் பேமஸான நடிகை அவர். தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஒரே நேரத்தில் புகழும், பணத்துக்கும் சொந்தமானார். ஆனால், ஒரு சில ஏமாற்றங்களால் கையில் இருந்த பணம் கரையவே அம்மணி ரொம்பவே வருத்தப்பட்டிருக்கிறார். 

பின்னர், அதிலிருந்து சுதாரித்துக் கொண்ட அவரது ஷெட்யூல் மீண்டும் ஃபுல்லானது. தொடர்ச்சியாகப் படத்தில் நடித்து அதிலிருந்து மீண்ட அவர், கரியரின் உச்சத்திலேயே சக நடிகரைத் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் நடிக்க வந்த அவருக்கு ஹீரோவின் அம்மா வேடம், குணச்சித்திர வேடங்கள் கிடைத்தன. 

வந்த வரை லாபம் என அதில் நடிக்கத் தொடங்கியவருக்கு விளம்பர வாய்ப்புகள் குவிந்தன. அதிலும், விளம்பர ஃபீல்டில் முன்னணி நடிகையை ஓரம்கட்டி நடித்துக் குவித்தார். இந்தநிலையில், சினிமாவில் கவனம் செலுத்தப் போவதாக அந்த நடிகை நெருக்கமானவர்களிடம் கூறிவந்தார். 

அப்படித்தான் காமெடி நடிகர் இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க முடியுமா என நம்ம நடிகையை படக்குழுவினர் அணுகியிருக்கிறார்கள். அதற்கு, நானெல்லாம் யாருடன் ஜோடியாக நடித்தவள், காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்க அழைக்கிறீர்களே என்று சீறியிருக்கிறாராம். அத்தோடு, வாய்ப்பில்லாமல் இருக்கிறேன் என்பதற்காக கிடைக்கும் எல்லா படத்திலும் நடிக்க முடியாது. இண்டஸ்டிரியில் எனக்குன்னு ஒரு பெயர் இருக்கு என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டாராம். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News