×

இப்படி ஆயிடுச்சே... முடிவை நினைச்சு வருந்தும் நடிகை

தமிழில் முன்னணி நடிகர்களோடு நடித்த நடிகை இப்போது எந்தவொரு வாய்ப்பும் இல்லாமல் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். 
 
இப்படி ஆயிடுச்சே... முடிவை நினைச்சு வருந்தும் நடிகை

பஞ்சாப் இறக்குமதி நடிகை அவர். முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு கரியரின் உச்சத்தில் இருந்த நடிகை தமிழில் 50 படங்களை நிறைவு செய்துவிட்டார். கரியரின் பீக்கில் இருந்தபோது வளர்ந்து வரும் நடிகரோடு ஜோடி போட்டு ஆச்சர்யப்படுத்தினார். 


அத்தோடு, கொழுகொழுவென்றிருந்த தனது லுக்கையும் மாற்ற நினைத்திருக்கிறார். நெருங்கிய வட்டார நண்பர்கள் இப்படி யோசனை சொல்ல, பாலிவுட் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் உடல் எடையைக் குறைத்திருக்கிறார். ஆனால், அவர் நினைத்தது நடக்கவில்லை. இருந்த ஒன்றிரண்டு வாய்ப்புகளும் கைநழுவிப் போனது. இதனால், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்குத் தொடர்ச்சியாக தூதுவிட்டு வருகிறார். ஆனால், எதுவுமே கைகூடவில்லை. இதனால், தனது முடிவை நினைத்து நொந்துபோயிருக்கிறாராம். 

From around the web

Trending Videos

Tamilnadu News