Categories: Cinema News latest news

டிரெண்டிங்காகும் தலைவர்! அடுத்தடுத்த அப்டேட்களை தெறிக்க விடும் லைக்கா – ‘ரஜினி170’ல் இணையும் ஆக்‌ஷன் ஹீரோயின்

Rajini 170 : தமிழ் சினிமாவில் ரஜினிக்கு இருக்கும் மாஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் எப்படிப்பட்ட ஒரு வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரியும்.

600 கோடிக்கும் மேலாக வசூல் செய்து மற்ற நடிகர்களுக்கு சவால் விடும் மாதிரியான சம்பவத்தை நெல்சன் செய்துவிட்டார். இதனால் லியோ திரைப்படம் எப்படியாவது ஜெயிலரின் வெற்றியை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இதையும் படிங்க: எங்களையே புலம்பவிட்டாரே.. எக்ஸில் ட்ரெண்ட்டாகும் #WakeUp7ScreenLalith.. என்ன பாஸ் பிரச்னை?

இந்த நிலையில் ஜெயிலர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜெய்பீம் இயக்குனர் த.ச.ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் ரஜினி. படத்தின் சூட்டிங் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் வரும் 4 ஆம் தேதியில் இருந்து தீவிரமாக படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஒரு வேளை 4ஆம் தேதியில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகும் என தெரிகிறது. ஏற்கனவே ரஜினி 170 படத்தில் மஞ்சு வாரியார் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. அவருடன் இணைந்து மேலும் சில நடிகைகளை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் படக்குழு.

இதையும் படிங்க: நீ நடிக்க வந்தா பல நடிகைகளுக்கு மார்கெட் காலி!. கட்டழகை கச்சிதமா காட்டும் விஜே கீர்த்தி…

அதற்கான அப்டேட்களை இன்று வரிசையாக லைக்கா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. துஷாரா விஜயன் இந்தப் படத்தில் இணைந்திருப்பதாக லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

இவர்களுடன் இணைந்து ஆக்‌ஷன் ஹீரோயின் ரித்திகா சிங்கும் ரஜினி 170 படத்தில் இணைந்திருப்பதாக லைக்கா நிறுவனம் தனது X  தளத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: நீ நடிக்க வந்தா பல நடிகைகளுக்கு மார்கெட் காலி!. கட்டழகை கச்சிதமா காட்டும் விஜே கீர்த்தி…

இந்தப் படத்தில் ஒரு போலீஸாக  ரஜினி வருவார் என்று சொல்லப்பட்டது. அவருக்கு உதவும் வகையில் மஞ்சு வாரியாரின் கதாபாத்திரம் அமையும் என்று கூறப்பட்டது.இதற்கிடையில் ஏற்கனவே பாக்ஸரான ரித்திகா சிங் இணைந்திருப்பது என்ன மாதிரியான கதாபாத்திரமாக இருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini