விக்ரம் படத்தில் நாயகியாகும் ரியா சிபு
Apr 20, 2026, 10:30 IST
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வந்தது. அரிமா நம்பி, இருமுகன் ஆகிய வெற்றிபடங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இந்த படத்தை இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தாரிக்கிறது. இசை: சந்தோஷ் நாராயணன்
கடந்த சில வருடங்களாகவே வெற்றி படங்களை கொடுக்காத விக்ரம் இந்த படத்தை நிச்சயம் வெற்றி படமாக்கவேண்டும் என்ற முனப்பில் உள்ளார். சமீபத்தில் வந்த இப்படத்தின் 'ஃபர்ஸ்ட் ஃப்ளேம் வரவேற்பை பார்க்கையில் நிச்சயம் இப்படம் விக்ரமின் தோல்விகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் என்றே தெரிகிறது.
இந்த நிலையில் விக்ரம் புதிய படத்தில் நாயகியாக சர்வம் மாயா புகழ் ரியா சிபு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே விக்ரம் நடித்த வீர தீர் சூரன் படத்தை இவர் தயாரித்துள்ளார் என்பது குறிபிடதக்கது.
