மகனின் 20-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ரோஜா... வைரலாகும் வீடியோ!

 
roja

நடிகை மற்றும் அரசியல்வாதியுமான ரோஜா, தனது மகன் கிருஷ்ண லோஹித்தின் 20-வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

தமிழ் திரைப்பட இயக்குநர் ஆர்.கே. செல்வாமணியை பல ஆண்டுகள் காதலித்த ரோஜா, கடந்த ஆகஸ்ட் 21, 2002 அன்று திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அன்ஷுமாலிகா என்ற மகளும், கிருஷ்ண லோஹித் என்ற மகனும் உள்ளனர்.

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா, பின்னர் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். தற்போது மீண்டும் கலைத்துறையில் கவனம் செலுத்தி வரும் அவர், 'லெனின் பாண்டியன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'கயல்' தொடரில் மறைந்த நடிகை சுபாஷினிக்குப் பதிலாக புதிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மற்றும் தெலுங்கு தொலைக்காட்சிகளில் பிரபலமான 'ஜபர்தஸ்த்' உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நடுவராகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், மகனின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய ரோஜாவின் குடும்ப வீடியோ இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே வாழ்த்துகளை பெற்று வருகிறது.

Tags

From Around the web