ரோஜா பிறந்தநாளில் பிரபுதேவா, மீனா என ஏகப்பட்ட பிரபலங்கள்!.. கேக் ஊட்டிவிட்டு செம ஜாலி!..

 
roja

சமீபத்தில் தேர்தல் முடிவால் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை ரோஜா, தற்போது தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் மூலம் மீண்டும் கவனம் பெற்றுள்ளார்.

roja

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ரோஜாவின் கட்சி 3 வாக்கு எண்ணிக்கையில் தோற்றதால் தனது கட்சியினருடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

roja

இந்நிலையில், சமீபத்தி குடும்பத்தினருடன் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த ரோஜா செய்தியாளர்களை சந்தித்த போது நோ பாலிடிக்ஸ், நல்ல கதைகள் அமைந்தால் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

roja

மேலும், தற்போது தனது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் திரையுலக நண்பர்களுடன் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார் ரோஜா. இந்த விழாவில் இயக்குநர்கள் ஷங்கர், வெங்கட் பிரபு, மோகன் ராஜா, நடிகர் பிரபுதேவா, நடிகைகள் மீனா, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் ரோஜா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

CR  Desk
CR Desk

7927 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web