அவள் என் பொண்ணு - இப்படி ஒரு அக்காவா? சாய்பல்லவி Emotional!

 
sai pallavi

நடிகை சாய் பல்லவி: 

தெனிந்த சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்படும் சாய் பல்லவி தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் பான் இந்திய நடிகையாக தற்போது பார்க்கப்பட்டிருக்கிறார். நேச்சுரலான அழகில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் சாய்பல்வி .

sai pallavi

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து  வருகிறார் .

அவன் எனக்கு பொண்ணு மாதிரி:

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி பேட்டியில் தன்னுடைய தங்கை பூஜா குறித்து பேசி இருந்தார். அப்போது உங்க  தங்கச்சி உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா? என்று நேர்காணல் எடுக்கும் கோபிநாத் கேட்க... அதற்கு சாய் பல்லவி ஆமாங்க அவள் என்னோட பொண்ணு மாதிரி என ரொம்ப எமோஷ்னல் ஆகி பேசி இருந்தார்.

sai pallavi sister

இந்த வீடியோ இணையத்தில் வெளியாக சாய் பல்லவி இவ்வளவு ஒரு குணமான அக்காவா? இப்படி ஒரு அக்கா எங்களோட வாழ்விலும் இருக்கணும் அப்படின்னு நிறைய பேர் சாய் பல்லவி ஓட குணத்தை பாராட்டியுள்ளனர்.

சாய்பல்லவி தங்கை பூஜா ஒரு சில குறும்படங்களில் நடித்திருக்கிறார் இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். திருமணத்தில் சாய் பல்லவி தங்கைக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தார். 

Tags

From Around the web