என் கெட்டப் பாத்துட்டு அம்மா ஷாக் ஆயிட்டாங்க.. ஓம் பட அனுபவம் பேசும் சாய் பல்லவி..
பிரேமம் திரைப்படம் மூலம் மலையாள சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிரபலமானவர் சாய் பல்லவி. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். தமிழில் மாரி 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகனுக்கு ஜோடியாக அவர் நடித்த அமரன் திரைப்படம் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது. தற்போது மீண்டும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஓம் திரைப்படத்தில் போலீஸ் உயர் அதிகாரியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி அசத்தலாக சண்டையும் போட்டுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு முக்கிய தகவலை சாய் பல்லவி பகிர்ந்துள்ளார். ‘ ஓம் படத்திற்காக எனது தலைமுடியை வெட்டிவிட்டேன். அதன்பின் அம்மாவுக்கு வீடியோ கால் செய்தேன். என்னை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அழைப்பை துண்டித்து விட்டார்..
அப்பா ‘அது விக்தானே’ என்று கேட்டார்.. நான் உண்மையிலேயே தலைமுடியை விட்டு விட்டேன் என அவரிடம் சொன்னேன். அதன் பிறகுதான் அப்பா அம்மாவை சமாதானப்படுத்தினார். பொதுவாக மற்ற படங்களுக்காக என்றால் நான் தலைமுடியை வெட்டியிருக்க மாட்டேன்.. ஆனால் ராஜ்குமாருக்காக மட்டுமே இதை செய்தேன்.. இதற்காக மெரின் ஜோசப் ஐபிஎஸ் அவர்களின் புகைப்படத்தை அவர் எனக்கு முன்னுதாரணமாக காட்டினார்’ என சாய் பல்லவி கூறியிருக்கிறார்.
