sai
தமிழ் மலையாளம் என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தின் மூலம் முதன்முதலில் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன் பல டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஓரளவிற்கு பிரபலமாகி இருந்தார்.
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பரிசினை பெற்றவர் சாய் பல்லவி. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் சினிமாவில் அறிமுகம் கிடைத்தது. பிரேமம் படத்தில் மலர் டீச்சராக இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட நடிகையாக மாறினார் சாய்பல்லவி.
sai1
அதேபோல நானியுடன் ஷியாம் சிங்காராய் என்ற படத்தில் நடித்து பெரும் புகழைப் பெற்றார். தமிழிலும் தனுசுடன் மாரி 2 என்ற படத்தில் மற்றும் சூர்யாவுடன் என்.ஜி.கே என்ற படத்திலும் நடித்தார் .தற்போது ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகும் ஒரு புதிய படத்தில் லீடு ரோலில் நடிக்கிறார் சாய் பல்லவி.
அனைவருக்கும் பிடித்த நடிகையாக வலம் வரும் சாய் பல்லவியை இப்போது வரை எந்த நடிகருடன் கிசுகிசுக்காமல் பார்க்க முடிகின்றது. அதேபோல கவர்ச்சி தான் முக்கியம் என்று இப்போது உள்ள சினிமா இருந்து வரும் நிலையில் கவர்ச்சிக்கு நோ என்று கண்டிஷன் போட்டு அனைத்து படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
sai2
இந்த நிலையில் சாய்பல்லவி பற்றிய ஒரு ரகசியம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது அவர் ஏழாம் வகுப்பு படிக்கும் போது அவருடன் படிக்கும் சக மாணவருக்காக ஒரு லவ் லெட்டர் எழுதி வைத்திருந்தாராம். ஆனால் அந்த லெட்டரை அந்த மாணவருக்கு கொடுப்பதற்கு முன்பாகவே சாய் பல்லவியின் அம்மா அதை படித்து விட்டாராம். உடனே அவரது அம்மா அவரை அடி அடி என்று துவைத்து விட்டாராம் .அதுதான் சாய் பல்லவி முதலும் கடைசியுமாக எழுதிய லவ் லெட்டராம்.
ஜெயம் ரவி…
Idli kadai:…
Vijay: கரூரில்…
Idli kadai:…
Rajinikanth: தமிழ்…