கோவா பீச்சில் குளு குளு கவர்ச்சி... சாக்ஷி அகர்வாலின் அலப்பறை தாங்கலயே!...
Sat, 26 Dec 2020

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெடி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார். ரசிகர்கள் எவ்வளவு திட்டினாலும் அதை அவர் கண்டு கொள்வதில்லை.
இந்நிலையில், கிறிஸ்துமஸை கொண்டாட கோவா சென்றுள்ள சாக்ஷி அங்கு கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அங்கு கோவா கடற்கரையில், கவர்ச்சி உடையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.