Categories: Cinema News latest news

கோவாவில் குளுகுளு கவர்ச்சி…நீச்சல் உடையில் ஷாக் கொடுத்த சமந்தா….

சமீபத்தில் கணவரை பிரிந்த நடிகை நடிகை சமந்தா திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் அவர் நடனமாடிய பாடலான ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் வைரல் ஹிட் ஆகியுள்ளது.

தமிழை பொறுத்தவரை விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் படத்தில் சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாராவும் நடிப்பது கூடுதல் சிறப்பு. மேலும், The family man 2 படத்தை இயக்கிய இரட்டைஇயக்குனர்கள் இயக்கும் ஒரு புதிய வெப் சீரியஸிலும் சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மொத்தத்தில் டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருகிறார்.

ஒருபக்கம் தனது கவர்ச்சியான மற்றும் அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதிலும், சமீபகாலமாக அவர் காட்டு கவர்ச்சி ஓவர் டோஸாக இருக்கிறது.

இந்நிலையில், கோவாவுக்கு சென்ற அவர் நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா