Categories: Cinema News latest news

வெளியேறும் நயன்தாரா..? ஷாருக்கான் படத்தில் இணையும் சமந்தா?

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லி. குறுகிய காலத்தில் இவர் மிகப்பெரிய வளர்ச்சியடைந்துள்ளார். இவரது படங்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் வெற்றி பெற்று விடுகிறது.

அந்த வரிசையில் இவரது முதல் படமான ராஜா ராணி, மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான மெளனராகம் படத்தின் காப்பி என பேசப்பட்டது. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்திருந்ததால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

atlee

இதனையடுத்து விஜய்யை வைத்து இவர் இயக்கிய தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களும் சர்ச்சைகளை சந்தித்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதில் பிகில் மற்றும் சற்று மோசமான விமர்சனத்தை எதிர்கொண்டது. இதையடுத்து தற்போது இவர் பாலிவுட் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

அங்கு ஷாருக்கானை வைத்து புதிய படம் ஒன்றை அட்லி இயக்க உள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதில் பிரியாமணி மற்றொரு நாயகியாகவும், யோகி பாபு காமெடியனாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் மும்பையில் தொடங்கியது.

முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், போதைப்பொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தாமதமானதால் இப்படத்திலிருந்து நயன்தாரா விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு தென்னிந்திய நடிகை இப்படத்தில் நடித்தால் தென்னிந்தியாவிலும் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பதாலே இதில் நயன்தாராவை தேர்ந்தெடுத்தனர். தற்போது நயன்தாரா விலகியதாக கூறப்படும் நிலையில், சமந்தாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா