எல்லாருக்கும் தோணும்!. சிலராலதான் முடியும்!.. விஜயை சந்தித்த சமந்தா ஃபீலிங்!..

நடிகை சமந்தா முதல்வர் விஜயை சந்தித்துள்ளார்.
 
samantha vijay

தற்போது நடிகர் விஜய் முதலமைச்சர் விஜயாக மாறியிருக்கிறார். இது திரையுலகில் பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. குறிப்பாக அவருடன் நடித்த பல நடிகர், நடிகைகளுக்கும், அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கும் விஜய் முதலமைச்சரானது மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.

எனவே அவர்களின் பலரும் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். அதோடு அவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளங்களில் அவர்கள் வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் கூட நடிகைகள் சினேகா, சிம்ரன் ஆகியோர் விஜயை சந்தித்து அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர். நடிகை சமந்தாவும் தற்போது முதல்வர் விஜயை சந்தித்து அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

samantha

அந்த பதிவில் ’நான் இந்த சென்னை இறங்கியதும் மனது முழுக்க சந்தோஷமாக இருந்தது.. முதல்வர் விஜயை சந்திக்க சென்றேன். அவர் ஒரு சாதாரண சினிமா நடிகர் மட்டும் இல்லை. அவரின் எனர்ஜி, அவர் மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் விதம் எல்லாமே அவர் பெரிதாக எதையே செய்யப்போகிறார் என எனக்கு தோன்றும். வலுவாக இருக்கும் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பெரிய தைரியம் வேண்டும். அதை அவர் செய்திருக்கிறார். அவர் ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்கிறார்.

samantha

வாழ்க்கையில் எல்லோருக்கும் அது போன்ற ஒரு தருணம் வரும். ஆனால் சிலர் மட்டுமே அதை தைரியமாக செய்து வெற்றியும் பெறுவார்கள். முதல்வர் விஜய்க்கு மன வலிமையும் தைரியமும் கிடைக்க வேண்டும் என விருப்பப்படுகிறேன். இதைப் பார்த்து இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். வாழ்க்கை மிகவும் பெரியது நீங்கள் துவங்கியுள்ள கனவை விட’ என கூறியிருக்கிறார்.

Tags

From Around the web