ஆண் குழந்தைக்குத் தாயான சமந்தா!.. மகனின் பெயரையும் அறிவித்து நெகிழ்ச்சி பதிவு!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா ரூத் பிரபு, ஆண் குழந்தைக்குத் தாயாகியுள்ளார்.
 
samantha

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா ரூத் பிரபு, ஆண் குழந்தைக்குத் தாயாகியுள்ளார். நடிகை சமந்தா மற்றும் அவரது கணவரும் பிரபல இயக்குநருமான ராஜ் நிடிமோரு தம்பதிக்கு நவம்பர் 19ஆம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

 
தங்களது முதல் குழந்தையின் வருகையை அறிவித்துள்ள சமந்தா - ராஜ் தம்பதி, மகனுக்கு தேவ் நிடிமோரு எனப் பெயர் சூட்டியுள்ளனர். குழந்தையின் பிஞ்சு விரல்களைப் பெற்றோர் பிடித்திருக்கும் அழகான புகைப்படத்தையும் சமந்தா வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், தங்களது அழகான ஆண் குழந்தை தேவ் நிடிமோரு நவம்பர் 19ஆம் தேதி பிறந்ததாகவும், இதுவரை இல்லாத அளவுக்கு தங்களது இதயங்கள் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

samantha


சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிடிமோருவுக்கும் கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை சமந்தா அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்ற வளைகாப்பு மற்றும் சிறப்பு பூஜை தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இந்த நிலையில், தற்போது ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சமந்தாவுக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Sai Vikas
Sai Vikas

127 Articles

Sai vikas is an experienced digital journalist with 16years of expertise in online news reporting. He specializes in covering cinema and sports

From Around the web