×

ரஜினி வந்தா வரட்டும்.. நான் வர மாட்டேன்... இப்படி செய்யலாமா சமந்தா? 

 
samantha

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா 2வது அலையின் தீவிரம் மிகவும் அதிகமாகவுள்ளது. ஒவ்வொரு நாளும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், சினிமா துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

திரை பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் அச்சத்தின் காரணமாக முக்கிய நடிகர்கள் பலரும் படப்பிடிப்பிற்கு செல்ல தயங்கி வருகின்றனர்.

samantha

இந்நிலையில், நடிகை சமந்தா ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு குழுவினர் சமந்தாவிற்காக காத்திருந்தனர். ஆனால், சமந்தா படப்பிடிப்பிற்கு செல்லவில்லை. படக்குழுவினர் அவரை தொடர்பு கொண்டு விபரம் கேட்டபோது, படப்பிடிப்பை தள்ளி வையுங்கள். என்னால் வர  முடியாது என கூறியுள்ளார். 

ரஜினி போன்ற பெரிய நடிகரே அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் இருக்கிறார். நீங்கள் வரலாமே என படப்பிடிப்பு குழுவினர் அவரை சம்மதிக்க வைக்க எவ்வளவோ முயன்றுள்ளனர். ஆனால் ‘ரஜினி வந்தால் வரட்டும்.. நான் வர முடியாது.. எனக்கு உன் உடல்நிலைதான் முக்கியம்’ என கறார கூறிவிட்டாராம்.எனவே, அடித்துவிட்டு படப்பிடிப்பை படக்குழுவினர் ரத்து செய்துவிட்டனராம்...

தமிழகத்தில் விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிக்கும் புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News