×

நீ என்ன வேணா சொல்லிக்கோ!.. டூ பீஸ் உடையில் படு கிளாமரான புகைப்படத்தை வெளியிட்ட சனம் ஷெட்டி...

 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷன். இவரை சனம் ஷெட்டி காதலித்து வந்தார். பின்னர் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், ஆனால் தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு, தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.  அவர் நன்றாக விளையாடியும் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இது அவரின் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தற்போது சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.நேற்று காலை தனது  டிவிட்டர் பக்கத்தில் பனியன் மட்டும் அணிந்து ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்தார். அதன்பின் ‘குளிக்கும் நேரம்’ என குறிப்பிட்டு நீச்சல் குளத்தில் பிகினி உடையில் நிற்கும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதைக்கண்ட நெட்டிசன்கள் ‘உங்களுக்கு புடவைதான் அழகாக இருக்கிறது. இப்படி உடை அணியாதீர்கள்’ என அவருக்கு அறிவுரை கூறி வந்தனர்.

தற்போது டூ பீஸ் உடையில் படு கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தூங்க விடாமல் செய்துள்ளார். மேலும் ‘என்னை பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என நான் கவலைப்படவில்லை’ என பதிவிட்டுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News