தெய்வத்திருமகள் குழந்தை சாராவா இது....? ஹீரோயின் லுக்கில் இழுக்குறாங்க!

 
Actress sara arjun

தெய்வத்திருமகள் திரைப்படம்: 

நடிகர் விக்ரமின் வெற்றி திரைப்படங்களில் தெய்வத்திருமகள் திரைப்படம் மிக முக்கியமான படமாக பார்க்கப்பட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மன வளர்ச்சி குன்றியவராக நடித்திருப்பார்.

sara

இத்திரைப்படத்தில் மனவளர்ச்சி குன்றிய விக்ரமின் மனைவி குழந்தை பிறப்பிற்கு பிறகு இறந்து போகிறார். தன்னுடைய குழந்தையை விக்ரம் தானே வளர்கிறார். இதை அறிந்த அவரது மனைவி குடும்பத்தார் மனவளர்ச்சி குன்றிய அவரிடம் இருந்து குழந்தையை பிரித்து விடுகிறார்கள் .

சாராவின் நடிப்பு: 

பின்னர் சாரா தந்தையிடம் எப்படி சேர்ந்தார் என்பதுதான் இப்படத்தின் கதை. இந்த திரைப்படத்தில் விக்ரமின் மகளாக குழந்தை சாரா மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த நிலையில் சாரா நன்றாக வளர்ந்து தற்போது ஹீரோயினாக பாலிவுட் திரைப்படங்களில் நடித்த வருகிறார் .

sara

ரன்வீர் சிங் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான துரந்தர் திரைப்படத்தில் சாரா அவருக்கு ஹீரோயின் ஆக நடித்து அசத்தியிருந்தார். இந்த நிலையில் சாரா ஹீரோயின் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஹீரோயின் லுக்கில் சாரா: 

sara

சாரா அழகான ஹீரோயின் எனக் குறி பாலிவுட் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால் தமிழ் ரசிகர்கள் நீங்கள் குழந்தையாக இருந்ததை பார்த்து ரசித்த நாங்கள் இந்த அளவுக்கு ஹீரோயின் வளர்ச்சி எங்களால் இன்னும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நீங்கள் எங்களுடைய மனதில் இன்னும் குழந்தையாகவே தான் இருக்கிறீர்கள் சாரா என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

Tags

From Around the web