ஜெயிலில் களி திங்கமுடியாது... மனைவியின் மிரட்டலுக்கு சரவணன் பதிலடி!

 
saravanan

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் திரைப்படத்தில் சித்தப்பு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகர் சரவணன். இவரது முதல் மனைவி சரவணன் மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்திருந்தார் .

அதற்கு பதிலடி கொடுத்திருக்கும் நடிகர் சரவணன் நான் என்னுடைய முதல் மனைவியை பிரிந்து இரண்டாம் திருமணம் செய்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆகுது. எனக்கு 9 வயதில் ஒரு மகனும் இருக்கிறான். என்னுடைய முதல் மனைவி சூர்யா ஸ்ரீ கூறி இருப்பது முற்றிலும் தவறானது .

saravanan

என்னிடம் பணத்தை அபகரிப்பதற்காக தான் அவர் இந்த மாதிரியான நாடகத்தை நடத்துகிறார். என்னுடைய மகனை விட்டு விட்டு ஜெயிலுக்கு போய் என்னால் களி திங்க முடியாது. ஆகவே என்னுடைய மனைவி உயிருக்கு ஆபத்து எனவும் நான் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறியிருக்கும் விஷயம் அனைத்தும் பொய்யானது. நான் அந்த மாதிரி எண்ணத்தில் இல்லை என கூலாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

Tags

From Around the web