Connect with us
savithri

Cinema News

ஜெமினி கணேசன் வந்தாதான் நான் நடிப்பேன்!.. படப்பிடிப்பில் அடம்பிடித்த சாவித்ரி!.. இப்படி ஒரு லவ்வா!..

தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக வலம் வந்தவர் ஜெமினி கணேசன். இவருக்கு பல பெண் ரசிகைகளும் இருந்தார்கள். நிஜ வாழ்விலும் உல்லாச பேர்வழியாக வலம் வந்தவர் இவர். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இவர் திருமணம் செய்து கொண்டார். அதனின் 2ம் திருமணமும் செய்து கொண்டார்.

சாவித்ரியுடன் பல படங்களிலும் நடித்தார். இதனால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதற்கு ஜெமினி கணேசன் வீட்டில் எதிர்ப்பு வந்தாலும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. ஒருகட்டத்தில் சாவித்ரியை ரகசிய திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருந்தனர்.

இதையும் படிங்க: பாசமலர் படத்தில் நடித்ததால் சாவித்ரிக்கு வந்த நஷ்டம்!… இந்த ரசிகர்களே இப்படித்தான்!…

ஆனால், சில காரணங்களால் விரக்தி அடைந்த சாவித்ரி மதுப்பழக்கத்திற்கு ஆளானார். சொந்தமாக படம் எடுத்து நஷ்டமாகி கடனில் சிக்கி சொத்துக்களை இழந்தார். நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்தார். அவரின் கடைசி காலத்தில் ஜெமினி கணேசன் அவரை நன்றாகவே பார்த்துக்கொண்டார்.

savithri

சாவித்ரியின் மறைவுக்கு பின் அவருக்கும் தனக்கும் பிறந்த மகனை அவருக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை முறையாக செய்து செட்டில் செய்து வைத்தார் ஜெமினி கணேசன். சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் பேசிய ஜெமினி கணேசன் மகன் இதுபற்றியும் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: ஜெமினியை நேருக்கு நேராக எதிர்த்துப் பேசிய சாவித்ரி!.. சந்திரபாபுதான் எல்லாத்துக்கும் காரணமா?

ஜெமினி கணேசன் இரண்டு முறை திருமணமானவர் என்பது தெரிந்தும் சாவித்ரி அவரை காதலித்தார். இருவரும் இணைந்து நடித்து மணம்போல் மாங்கல்யம் என்கிற படம் உருவான போது ஒருநாள் ஜெமினி கணேசன் படப்பிடிப்புக்கு வரவில்லை. அவர் வந்தால்தான் நான் நடிப்பேன் என இயக்குனரிடம் சொல்லிவிட்டார் சாவித்ரி.

இத்தனைக்கும் சாவித்ரியை வைத்து தனியாக காட்சிகள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனாலும், ‘அவர் வராமல் நடிக்க மாட்டேன்’ என சொல்லி இருக்கிறார். அப்போதுதான் இருவரும் தீவிர காதலில் இருக்கிறார்கள் என்பது படப்பிடிப்பு குழுவினருக்கு புரிந்திருக்கிறது.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top