வாய்ப்புக்காக இப்படியெல்லாமா கேப்பாங்க... கண்ணீர்விடும் நடிகை

சின்னத்திரையிலிருந்து வெள்ளித் திரை வந்து நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அந்த நடிகை. சீரியலில் இருந்துகொண்டே அவர் நடித்த முதல் படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கவே, மொத்தமாக சீரியலுக்கு அவர் முழுக்குப் போட்டுவிட்டு வெள்ளித் திரை பக்கமே ஒதுங்கினார்.
அடுத்து இவர் நடித்த தெலுங்குப் படமும் ஹிட்டடிக்கவே, தமிழில் கடவுள் பெயர் கொண்ட படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படமும் வியாபாரத்தில் நல்ல பெயரைக் கொடுக்கவே, நம்ம நடிகைக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
ஆனால், வாய்ப்புகளோடு சேர்ந்து வேறு ஒரு பிரச்சனையும் வந்தது. நடிகையின் மேனஜருக்கு போன் பண்ணுபவர்கள் நடிகையைப் படுக்கைக்கு அழைக்கும் வகையில் பேசுகிறார்களாம். அதனால், நடிகை ரொம்பவே அப்செட் என்கிறார்கள். இதனால், திரும்பவும் சின்னத்திரைக்கே போய்விடுகிறேன் என்று நடிகை கண்ணீர்விடுவதாகச் சொல்கிறார்கள்.