×

இளம் வயதில் காதல் திருமணம்... 40 வயதில் இரண்டாம் திருமணம்... தற்போது தனிமையில் நடிகை

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பது பார்த்திபனுக்கு பிடிக்காமல் போனதாம். இதையடுத்து 10 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையை பார்த்துக்கொண்டு இருமகள்களுடன் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
 
Seetha

80-களில் முன்னணி மற்றும் பிஸியான நடிகையாக இருந்தவர் நடிகை சீதா. ஆண் பாவம், குரு சிஷ்யன், ராஜாநடை என பல படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். அவருடன் இயக்கி இணைந்து நடித்த பார்த்திபனுடன் 1989 ல் காதல் ஏற்பட்டு வீட்டை மீறி திருமணம் செய்து கொண்டார். பார்த்திபன் மீது அதீத அளவில் காதல் கொண்டார் சீதா.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பது பார்த்திபனுக்கு பிடிக்காமல் போனதாம். இதையடுத்து 10 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையை பார்த்துக்கொண்டு இருமகள்களுடன் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின் 2001ல் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். சீதா ஒரே வருடத்தில் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பின், 2010ல் சதிஷ் சுதீசுடன் திருமணம் செய்தார். இரண்டாம் திருமணத்திற்கு பின் அளித்த பேட்டியொன்றில், வயதான நிலையில் ஒரு பெண் துணை இல்லாமல் வாழ முடியாது என்பதற்காகவும் எனக்கு துணை வேண்டுமென்பதால் 40 வயதில் திருமணம் செய்து கொண்டேன். சதீஷால் தற்போது சந்தோஷப்படுகிறேன் என்று கூறியிருந்தார். இதையடுத்து, 2016 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து பெற்று தாயுடன் வாழ்ந்து வருகிறார்.

இளம் வயதில் காதல் திருமணம்... 40 வயதில் இரண்டாம் திருமணம்... தற்போது தனிமையில் நடிகை

From around the web

Trending Videos

Tamilnadu News