தினம் தினம் வலியை அனுபவித்த செப் தாமு!.. ஷகிலா பகிர்ந்த தகவல்!..

 
shakeela thamu

சின்ன சின்ன ஹோட்டல்களில் வேலை செய்து வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்த சமையல் கலைஞர் செப் தாமு. கடந்த பல வருடங்களில் பல விஐபி பிரபலங்களின் திருமணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் இவரின் டீம் உணவுகளை தயாரித்திருக்கிறது.

அரசு தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களுக்கும் கூட சமையல் தொடர்பான பல அறிவுரைகளை செப் தாமு வழங்கியிருக்கிறார். கடந்த பல வருடங்களாகவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். இன்னும் செல்லப்போனால் இந்த நிகழ்ச்சி மூலம்தான் தாமு மக்களிடம் அதிகம் பிரபலமானார். அவரை போட்டியாளர்கள் மட்டுமில்லாமல் மற்றவர்களும் அப்பா என்றே அன்போடு அழைத்தனர். இந்நிலையில்தான் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தாமு என்கிற தாமோதரன் சமீபத்தில் காலமானார்.. அவருக்கு வயது 72.

அவரின் உடலுக்கு சின்னதிரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகை ஷகிலா ‘என் சொந்த அப்பா இறந்த போது கூட அழாத நான் தாமு அப்பா உடலை பார்த்து கதறி அழுதி விட்டேன். அவர் மிகவும் ஜாலியான மனிதர்.. யாரையும் கடிந்து பேச மாட்டார்..

பல வருடங்களாகவே கால் வலியால் அவதிப்பட்டு வந்தார்.. எனவே ஷூட்டிங்கின் போது எப்போதும் சேர் போட்டு அவரை உட்கார வைப்பேன்.. ‘உடம்பை ரொம்ப கவனமா பாத்துக்கணும்.. வேலை வேலை என்று இருந்தால்தான் இவ்வளவு வலியோடு வாழ்ந்து வருகிறேன்’ என்று அவர் அடிக்கடி என்னிடம் சொல்வார்’ என உருகியிருக்கிறார் ஷகிலா.

Tags

From Around the web