Connect with us

Cinema News

என் படத்தை பார்த்துட்டு என் தம்பிக்கு காய்ச்சல் வந்துடுச்சி!.. ஷகிலா சொன்ன ஷாக் தகவல்!…

மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருந்து பிறகு தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகையானவர் நடிகை ஷகிலா. மலையாளத்தில் நடிகையாக இருந்து வந்த ஷகிலா வயதான பிறகு தமிழ் சினிமாவில் சிவா மனசுல சக்தி, அழகிய தமிழ் மகன் போன்ற திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு குக் வித் கோமாளி 2 ஆம் சீசனில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து யூ ட்யூப் தளங்களில் இவருக்கு நல்ல வரவேற்பு உருவாகியுள்ளது. ஒரு பிரபலமான யூ ட்யூப் சேனலில் இவர் தற்சமயம் பணியாற்றி வருகிறார்.

அதில் ஒரு பேட்டியில் பேசும்போது சினிமா பெண்களிடம் கெளரவ குறைவாக நடந்துக்கொள்வதை பற்றி விவரிக்கிறார் ஷகிலா. அவரிடம் பல இயக்குனர்கள் அட்ஜெஸ்ட் செய்து போகுமாறு கேட்டுக்கொண்டது குறித்து பேசி வந்தார். ஏனெனில அந்த சமயத்தில் ஷகிலா மலையாளத்தில் கவர்ச்சி நடிகையாக இருந்து வந்தார்.

தம்பிக்கு நேர்ந்த பாதிப்பு:

அப்போது ஷகிலாவின் தம்பி ஒரு திரைப்படத்திற்கு சென்றுள்ளார். அந்த திரைப்படத்தில் ஷகிலா நடித்திருப்பது அவருக்கு தெரியாது. படம் துவங்கி சிறிது நேரத்தில் படத்தில் ஷகிலா தோன்றியுள்ளார். அதை பார்த்தவுடனேயே அவர் தம்பிக்கு வயிற்றை கலக்க துவங்கியிருக்கிறது. வேகமாக வீட்டுக்கு சென்றவருக்கு அன்று முழுக்க வயிற்றுபோக்கு மற்றும் காய்ச்சல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

என்ன விஷயம் என ஷகிலா கேட்கும்போது விஷயத்தை கூறியுள்ளார் தம்பி. அதை கேட்ட ஷகிலா. அடப்பாவி அந்த படத்துல நான் நல்லப்படியாதானடா நடிச்சிருந்தேன் என்றார். அதற்கு அவரது தம்பி “இல்ல நான் படத்தை பார்க்கலை. நீங்கள் வருவதை பார்த்ததுமே பயந்துக்கிட்டு வந்துட்டேன்” என கூறியுள்ளார். இந்த நிகழ்வை ஷகிலா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Continue Reading

More in Cinema News

To Top