100 கோடி கடனாளியான ஷாலினி!.. எல்லாம் அஜித் பண்ண வேலை!..
இதுவரை மற்றவர்களின் தயாரிப்பில் மட்டுமே நடித்து வந்த அஜித் முதன் முறையாக டேர் டெவில் படம் மூலம் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். ஏனெனில் அவர் கேட்கும் ரூ.185 கோடி சம்பளத்தை கொடுக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. தமிழ்நாடு, மும்பை உள்ளிட்ட பல மாநிலங்களிலும் தயாரிப்பாளரை தேடியும் யாரும் ஆர்வம் காட்டவில்லை. எனவே, வேறு வழியில்லாமல் அஜித்தே சொந்தமாக இந்த படத்தை தயாரிப்பது என முடிவெடுத்து தனது மனைவியை ஷாலினியை தயாரிப்பாளர் ஆக்கிவிட்டார்.
தமிழ் சினிமாக்களுக்கு ஃபைனான்ஸ் செய்யும் 2 பிரபல வினியோகஸ்தர்களிடம் ரூ.100 கோடி கடன் வாங்கியே இந்த படத்தை உருவாக்கவிருக்கிறார்கள். அதற்கான ஆவணத்தில் தயாரிப்பாளர் என்கிற முறையில் ஷாலினி கையெழுத்திட்டிருக்கிறார். அதோடு, எனது விருப்பத்தின் பெயரில்தான் ஷாலினி கடன் வாங்குகிறார் என அஜித்தும் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்திருக்கிறாராம் அஜித்.
அதோடு, பல வருடங்களாக தன்னிடம் மேனேஜராக இருக்கும் சுரேஷ் சந்திராவை டேர் டெவில் படத்தில் இணை தயாரிப்பாளர் ஆக்கியிருக்கிறாராம்.
