ராஜா சின்ன ரோஜா சீனெல்லாம் ஞாபகம் வருதே!.. ரஜினியுடன் ஷாலினி சந்திப்பு!..
அனிருத் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அருகில் நடிகை ஷாலினி அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் கலந்துகொண்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கல்யாண் நவராத்திரி கொண்டாட்டத்தில் சிவகார்த்திகேயன் பங்கேற்ற புகைப்படங்கள் வைரலான நிலையில், தற்போது அனிருத் வீட்டில் நடைபெற்ற விழாவில் அவர் கலந்துகொண்டதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இயக்குநர் நெல்சன் திலீப்குமார், நடிகர்கள் சினேகா, பிரசன்னா உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

நடிகை ஷாலினி, குழந்தை நட்சத்திரமாக ரஜினிகாந்துடன் இணைந்து ராஜா சின்ன ரோஜா படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்தும் ஷாலினியும் ஒரே நிகழ்ச்சியில் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
