Categories: Cinema News latest news

அஜித்தை நான் கடவுளா பார்க்குறேன்! மூத்த நடிகையே இப்படி சொல்றாங்களே

Actor Ajith:ஒரு பக்கம் ஹேமா கமிட்டியின் மூலம் பல நடிகர்களின் சுயரூபம் வெளிச்சத்திற்கு வந்த நிலையும் அஜித்தை நான் கடவுளாக பார்க்கிறேன் என ஒரு மூத்த நடிகை சொன்னது பெரும் வைரலாகி வருகின்றது. அஜித்தை பொறுத்தவரைக்கும் யாரிடமும் அவ்வளவு எளிதாக நெருங்க மாட்டார்.

அனைவரிடமும் ஒரு லிமிட்டை வைத்துக் கொள்வார். தான் உண்டு தன் வேலை உண்டு என ஆரம்பகால முதல் இப்போது வரை அதையே தான் பின்பற்றி வருகிறார். சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருந்த சமயத்தில் நடிகை ஹீராவுடன் கிசு கிசுக்கப்பட்டார் அஜித் .

இதையும் படிங்க: இப்படியே போனா பிரசாந்த் நிலமைதான் ஜெயம் ரவிக்கும்!.. என்னப்பா சொல்றீங்க!…

ஆனால் அதன் பிறகு எந்த நடிகைகளுடனும் அவரைப் பற்றி இணைத்து எந்த ஒரு செய்தியும் வெளிவந்ததே இல்லை. அமர்க்களம் திரைப்படத்திற்கு பிறகு நடிகை ஷாலினியை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு குழந்தைகள் மனைவி குடும்பம் என அவருடைய வாழ்க்கையே  மாறியது .

அதுவும் ஷாலினி முழுக்க முழுக்க குடும்ப பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள அஜித் தனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வருகிறார். அதே வேளையில் குடும்பத்தையும் அவ்வப்போது கவனித்து வருகிறார். எந்த ஒரு நடிகைகளிடம் கேட்டாலும் அஜித்தை பற்றி சொல்வது பக்கா ஜென்டில்மேன் என்பதுதான்.

இதையும் படிங்க: மீண்டுமா? தனுஷ் இயக்கத்தில் இத்தனை டாப் பிரபலங்களா? பரபர அப்டேட்

அந்த அளவு நடிகைகளிடம் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்பவர் அஜித். இந்த நிலையில் ஹேமா கமிட்டியை பற்றியும் மலையாள சினிமாவில் நடிகர்கள் செய்யும் அராஜகத்தை பற்றியும் பல பேட்டிகளில் பகிர்ந்து வரும் பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸ் அஜித்தை பற்றி கூறியதுதான் இப்போது வைரலாகி வருகின்றது .

சாந்தி வில்லியம்ஸிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்டபோது ரஜினிகாந்த் பெயரை முதலில் சொன்னார். அதுவும் தன் கணவர் வில்லியம்ஸுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார் ரஜினி. அதனால் அவரை எனக்கு பிடிக்கும் என கூறிவிட்டு ஆனால் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித் தான் என்று கூறியிருக்கிறார்.

santhi

இதையும் படிங்க: அந்த சீரியலை முடிச்சது இதுக்குதானா? பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் ரீல் சர்ச்சை ஜோடி…

அவரை நான் கடவுளாக பார்க்கிறேன். அவர் செய்கிற பல உதவிகள் வெளியில் யாருக்குமே தெரியவில்லை. ஆனால் எனக்குத் தெரியும். அவர் யாருக்கு என்னெல்லாம் உதவிகள் செய்தார் என்று எனக்கு நிறையவே தெரியும் என கூறியிருக்கிறார் சாந்தி வில்லியம்ஸ். விஜய் பற்றி கேட்டதுக்கு விஜய் ஒரு குழந்தை என கூறியிருக்கிறார் சாந்தி வில்லியம்ஸ்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini