×

கிண்டலா பண்றீங்க... சவாலாக எடுத்துக் கொண்ட நடிகை

தமிழ்ப் பொண்ணு டேக்லைனோடு அறிமுகமான அந்த நடிகைக்கு ஒரு சில படங்களுக்குப் பின்னர் பெரிதாக வாய்ப்பு இல்லை. 
 
கிண்டலா பண்றீங்க... சவாலாக எடுத்துக் கொண்ட நடிகை

நான் தமிழ்ப் பொண்ணு என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லி வாய்ப்புக் கேட்டும் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லையாம். அதற்காக நம்ம நடிகை பல முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். ஆனால், ரிசல்ட் எதிர்பார்த்த மாதிரி வரவில்லை. 

திறமையிருந்தும் அழகிருந்தும் கிளாமருக்குத் தயாராக இருந்தும் வாய்ப்புகள் கதவைத் தட்டவில்லையே என்னதான் காரணமாக இருக்கும் என நெருங்கியவர்களிடம் புலம்பியிருக்கிறார். நீங்க கொஞ்சம் பூசினா மாதிரி குண்டா இருக்கீங்க என சிலர் சொல்ல, நடிகை கொதித்துவிட்டாராம். 

கிண்டலா பண்றீங்க என அதை சவாலாக எடுத்துக் கொண்டு உடல் எடையைக் குறைத்து சிக்குனு சிறுத்தைக் குட்டி மாதிரி ஆகிட்டேன் பாருங்க என கண்சிமிட்டி சிரிக்கிறாராம். இனிமேலாவது பட வாய்ப்புகள் வரும் என நடிகை போனையே பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News