
Cinema News
அந்த விஷயத்துக்கு அப்புறம்தான் விஜய் அமைதியாகி விட்டார்.. நடிகை ஷீலா பேட்டி..
Published on
By
திரையுலகில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் நடிகர் விஜய். ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படுவார். இவருக்கு எராளமான ரசிகர் கூட்டம் உண்டு. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனான விஜய் சிறு வயதில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார்.
அப்பாவின் இயக்கத்தில் நடிக்க துவங்கி அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து தற்போது விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என பேசும் அளவுக்கு முன்னேறியுள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
Leo
விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர். இவருக்கு ஒரு தங்கை உண்டு. அவரின் பெயர் ஷீலா. அதாவது விஜயின் சின்னம்மா இவர். இவரும் திரைப்பட நடிகைதான். தற்போது சீரியல்களில் அம்மா வேடத்தில் நடித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கூட அம்மா வேடத்தில் நடித்திருந்தார்.
sheela
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போதுதான் விஜய் பிறந்தார். நாங்கள் எல்லாம் சேர்ந்துதான் விஜயை வளர்த்தோம். எந்த பிரச்சனையும் செய்யாத சமத்து பையனாக விஜய் இருப்பார். விஜயின் தங்கையின் மறைவு அவரை மிகவும் பாதித்தது. அப்போது அவ்வளவு மருத்துவ வசதிகள் இல்லை. அதனால், அவள் இறந்துவிட்டாள்.
vijay
அந்த சம்பவத்திற்கு பின் விஜய் சோகமாக மாறிவிட்டார். நோய்வாய்பட்டு தங்கை தனது கண் முன்னே இறந்தது அவரை மிகவும் பாதித்தது. அதன்பின் அவர் மிகவும் அமைதியாகிவிட்டார். தற்போது அவர் பிஸியாக நடித்து வருவதால் அவரை பார்க்க முடியவில்லை. ஆனாலும், அவர் இவ்வளவு பெரிய நடிகரானது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது’ என ஷீலா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விக்னேஷ் சிவனால் லவ் டூடே நடிகருக்கு அடித்த லாட்டரி … ரெண்டாவது படத்திலேயே டாப் நடிகைக்கு ஜோடியா?…
Pradeep Ranganathan: கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படம் மூலம் ஹீரோவாகவும் வெற்றி பெற்றார்....
Hariskalyan: இந்த வருட தீபாவளிக்கு என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன என்பதை பற்றிய தகவல் தான் இந்த செய்தியில் நாம் பார்க்க...
STR49: முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் மற்ற நடிகர்களை போல தொடர்ந்து நடிக்கும் நடிகராக சிம்பு இல்லை. திடீரென்று ஒரு ஹிட்...
Biggboss: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த 8 சீசன்களாக இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும்...
Pradeep: கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய...