துள்ளுவதோ இளமை ஷெரின் இப்போ எப்படி இருக்காரு பாருங்க!.. கிளாமர் ரொம்பவே தூக்கல்!..
பிக் பாஸ் பிரபலமான நடிகை ஷெரினுக்கு படங்கள் நடிக்கும் வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் இணையத்தில் படு அக்டிவாக இருந்து வருகிறார். மேலும்,தற்போது அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
இந்திய மாடல் மற்றும் நடிகையான ஷெரின், தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002-ஆம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்த 'துள்ளுவதோ இளமை' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இத்திரைப்படத்தின் வெற்றி அவருக்கு ரசிகர்கள் மத்தியில் தனி அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து 'விசில்', 'ஸ்டூடண்ட் நம்பர் 1', 'உற்சாகம்', 'பூவா தலையா' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ் தமிழ் சீசன் 3' நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். நிகழ்ச்சிக்குப் பிறகும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஷெரின், தனது புகைப்படங்கள் மற்றும் பயண அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் கபிபாராக்களுடன் (Capybaras) எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் அவர் பதிவிட்டுள்ள கருத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த பதிவில், "அவர்கள் என்னைப் பற்றிக் கவலைப்படவோ அல்லது என் மீது கவனம் செலுத்தவோ இல்லை என்றாலும், அது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. கபிபாராக்களால் புறக்கணிக்கப்பட்டது கூட ஒரு மாயாஜால உணர்வைத் தந்தது" என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
ஷெரினின் இந்த பதிவு மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவரது பதிவுக்கு லைக்குகளை பதிவிட்டு வருகின்றனர்.
