Categories: Cinema News latest news throwback stories

சில்க் ஸ்மிதா எந்த நிலைமைல சினிமாவுக்கு வந்தாங்கன்னு தெரியுமா?.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!..

தமிழ் சினிமாவில் 80, 90களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. தன்னுடைய காந்த கண்களால் அனைவரையும் பரவசப்படுத்தியவர். இவரின் கால்ஷீட்டுக்காக தவம் கிடந்த இயக்குனர்கள் ஏராளம்.
மேலும் இவரின் பாடல் படத்தில் உள்ளதா என்று களமிறங்கும் தயாரிப்பாளர்களும் ஏராளம்.

ஹீரோ, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ இல்லையோ ஆடுவது ஒரு பாட்டுக்கு என்றாலும் இவருக்காகவே தியேட்டரில் அலைமோதிய கூட்டங்கள் தான் அதிகம். இவரின் தற்கொலை தான் சினிமா உலகையே புரட்டி போட்டது. இப்படி ஒரு அழகு கவர்ச்சி தேவையை தான் சினிமாவில் அறிமுகம் செய்தவர் யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.

silk

மறைந்த பிரபல குணச்சித்திர நடிகரான வினுச்சக்கரவர்த்தி தான் சில்க் ஸ்மிதாவை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். சிவக்குமார் நடிப்பில் வெளிவந்த வண்டிச்சக்கரம் படத்தில் ஒரு சாராயம் விற்கும் பெண்மணியின் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகைகளை தேர்வு செய்து கொண்டிருந்த நேரம்.

வினுச்சக்கரவர்த்தி நடிகர் மட்டுமில்லாமல் ஒரு திரைப்பட கதாசிரியரும் கூட. அந்த படத்திற்கு கதை திரைக்கதை எல்லாம் வினுச்சக்கரவர்த்தி தானாம். ஒரு சமயம் வினுச்சக்கரவர்த்தி அவர் வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்த போது வீட்டிற்கு எதிரே மாவு அறைக்கும் மில் இருந்ததாம்.

இதையும் படிங்க : “படம் இன்னைக்கு ரிலீஸ்”… ஆனால் படம் இன்னும் ரெடி ஆகல.. பாரதிராஜா பண்ண வேலை என்ன தெரியுமா??

அந்தக் கடைக்கு சில்க் மாவு அறைப்பதற்காக நின்று கொண்டிருந்தாராம். அவரை பார்த்ததும் வினு சக்கரவர்த்திக்கு ஒரே ஆனந்தமாம். உடனே கீழே இறங்கி சில்கை அழைத்து விசாரித்திருக்கிறார். ஏற்கெனவே சில்க் பிரபல கவர்ச்சி நடிகையான அபர்ணாவுக்கு டச்சப் வேலைகளை செய்து கொண்டிருந்தாராம். மேலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் சென்னைக்கும் வந்திருக்கிறார்.

silk

அவர் கண்களை பார்த்ததும் மிகவும் ஈர்க்கப்பட்டிருக்கிறார் வினு. உடனே தன் வீட்டிலேயே வண்டிச்சக்கரம் படத்திற்காக எந்த அளவுக்கு சில்கை தயார்படுத்தனுமோ ஒரு வார காலம் சில்கிற்கு பயிற்சி அளித்து நேராக படப்பிடிப்பிற்கு அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.

செட்டில் சிவக்குமார் உட்பட அனைவரும் சில்கை பார்த்ததுமே மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் வண்டிச்சக்கரம் படத்தில் நடிக்க சில்க் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதுவே சில்க் நடித்த முதல் படமும் ஆகிவிட்டது. இந்த செய்தியை சித்ரா லட்சுமணன் கூறினார்.

Published by
Rohini