Categories: Cinema News latest news

அந்த இயக்குனருடன் எஸ்.கே?!.. ஃபிளாப் கொடுத்தும் திருந்தலயே!. நல்லாதானே ‘போகுது!..

தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றுள்ளது. விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் வசூலினை இப்படத்தின் வழியாக சிவகார்த்திகேயன் முறியடித்து இருக்கிறார்.

மாவீரன், அமரன் படங்கள் சிவகார்த்திகேயனின் கேரியர் பெஸ்ட் படங்களாக மாறியிருக்கின்றன. சொல்லப்போனால் அமரன் படத்தில் அவர் இப்படி நடித்து இருப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு கடின உழைப்பினை அப்படத்தில் கொட்டி இருந்தார். இதனால் தான் படம் ஆரம்பித்ததில் இருந்து பெரும் சர்ச்சைகள் எழுந்தாலும், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் குறை வைக்கவில்லை.

இதையும் படிங்க: அடம்பிடிச்ச எஸ்.ஜே.சூர்யா… அதுக்கு சம்மதித்த தேவயானி…! அவரே சொல்லிட்டாரே..!

அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் SK 23, வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 25-வது படம், டான் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் 24-வது படம் என வரிசையாக கமிட் ஆகி இருக்கிறார். விஜய் அரசியலுக்கு சென்று இருப்பதால் தற்போது சிவாவின் காட்டில்தான் அடைமழை.

முன்னணி இயக்குநர்களின் கவனம் இவர்மீது திரும்பி இருக்கிறது. இந்தநிலையில் சிவகார்த்திகேயன் மீண்டும் பிரின்ஸ் படத்தின் இயக்குனர் கே.வி.அனுதீப் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறாராம். இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் அனைத்தும் நடந்து முடிந்து விட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

sivakarthikeyan

இதைப்பார்த்த ரசிகர்கள் இப்போ தான் நீங்க சரியான ரூட்டுல போகணும். ஆனா மறுபடியும் சொதப்ப ஆரம்பிச்சிட்டீங்க. ஏன் ப்ரோ இப்படி பண்றீங்க. உங்க படத்தை வந்து தியேட்டர்ல நாங்க பாக்கணுமா? வேண்டாமா?’ என சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர். பிரின்ஸ் படம் திரையரங்கில் மட்டுமின்றி, ஓடிடி தளத்திலும் வரவேற்பினை பெறத் தவறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Kanguva: கங்குவா படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு இது கியாரண்டி… புது போஸ்டர் சொல்லும் ரகசியம்!

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா