90களில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சிவரஞ்சனி. குறிப்பாக நடிகர் ஆனந்துக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.தலைவாசல், சின்ன மாப்ள, தங்க மனசுக்காரன், பொன் விலங்கு, கலைஞன், தாலாட்டு, ராஜதுரை, ராசா மகன், செந்தமிழ் செல்வன் என பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத்தில் சில படங்களிலும் தெலுங்கில் பல படங்களிலும் நடித்தார். அப்போது, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்துடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை.
இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் முத்த மகன் ரோஷனுக்கும், இளைய மகன் ரோஹனுக்கும் சினிமாவில் நடிக்க ஆசை உள்ளதாம். சிவரஞ்சனி தனது குடும்பத்துடன் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைக்கண்ட ரசிகர்கள் ‘எப்படி இருந்த சிவரஞ்சனி இப்படி ஆயிட்டாரே’ என ஷாக் கொடுத்துள்ளனர்.
இவரின் கணவர் ஸ்ரீகாந்த் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த அகாண்டா படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…