கோடை வெயிலுக்கு குளுகுளு ட்ரிப் அடித்த சினேகா - வெகேஷன் கிளிக்ஸ்!

 
sneha

நடிகை சினேகா: 

சிரிப்பழகி சினேகா 44 வயதாகிய போதிலும் இன்னும் மவுஸ் குறையாமல் தொடர்ச்சியாக ஹீரோயின் கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். விஜய்யுடன் கடைசியாக கோட் திரைப்படத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டே சினேகாலயா என்ற ஜவுளிக்கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார் .

sneha

இதன் மூலம் அவர் கணிசமான வருமானத்தையும் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் சினேகா பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

வெகேஷன் கிளிக்ஸ்: 

sneha

இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது கொளுத்தும் கோடை வெயிலுக்கு நடிகை சினேகா தனது குடும்பத்துடன் குளுகுளு ட்ரிப் அடுத்திருக்கிறார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களிடையே தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags

From Around the web