Categories: Cinema News latest news

ஆகாயம் போல் எங்கிருந்து பார்த்தாலும் தெரிகிறது அவள் காதல் – உருகிய சினேகன்!

தமிழ் சினிமாவின் பாடலாசிரியரும் கவிஞருமான சினேகன் நடிகை கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 8 ஆண்டுகள் காதலித்த இவர்கள் அதுகுறித்து மூச்சு கூட விடாமல் திருமணம் செய்திருப்பது தான் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

பாண்டவர் பூமி திரைப்படத்தில் பாடல் எழுதி அறிமுகமான சினேகன் தமிழ் சினிமாவின் பல்வேறு திரைப்படங்களுக்கு மிகச்சிறந்த பாடல்களை எழுதியுள்ளார். இவர் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்களிடையே பிரபலமானார்.

இதையும் படியுங்கள்: எத்தன முறை பாத்தாலும் சலிக்கல!… சிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஷூட்…

இந்நிலையில் சினேகன் தனது மனைவி கன்னிகாவுடன் இணைந்து பேட்டி ஒன்றில் பங்கேற்று தங்களது காதல் பயணம் முதல் கல்யாணம் வரை உள்ள அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். அப்போது உங்கள் மனைவி உங்கள் மீது வைத்திருக்கும் காதல் எவ்வளவு ஆழமானது என கேட்டதற்கு, ஆகாயம் போல் எங்கிருந்து பார்த்தாலும் தெரிகிறது அவள் காதல் என கூறி மனைவியை வெட்கத்தில் ஆழ்த்தினார்.

பிரஜன்
Published by
பிரஜன்